திருப்பத்தூர் நகராட்சி: ஒரு கண்ணோட்டம்
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திருப்பத்தூர் நகராட்சி பற்றிய சிறப்பு கண்ணோட்டம்
திருப்பத்தூர் நகராட்சி 1886 -ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. 10.02.1970ல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. 01.04.1977 முதல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 01.12.2008 முதல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நாளது வரை அதே நிலையில் இயங்கி வருகிறது.
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் இந்நகராட்சி அமைந்துள்ளது.
தற்போதைய நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த நகராட்சி எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
வார்டு வாரியாக ஒதுக்கீடு விபரம்
மொத்த வார்டுகள் 36
எஸ்சி வார்டு எண் 15,24, 36
எஸ்சி பெண்கள் வார்டு எண் 3,26,34, 35
பெண்கள் பொதுப்பிரிவு வார்டு எண் 1,5,6,7,11,16,19,20,21,22,25,28,29,30