திருப்பத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி, மற்றும் பாரதியார், வீர மங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்தும் தமிழக மக்களை அவமதித்து விட்டதாகவும் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.