திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
பொதுமக்களுக்கு முககவசம் அணிவித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை மற்றும் ஒமைக்கரான் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆபத்தை உணராமல் பொது மக்கள் முக கவசம் அறியாமல் சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பத்தூர் பேரு ந்து நிலையத்தில் வந்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார்.மேலும் வயது முதியோர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முக கவசத்தை அணிவித்தார். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் திருப்பத்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் திருப்பத்தூர் நகர காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் போலீசார் பலர் இருந்தனர்.