திருப்பத்தூர் புதிய சர்வே அலுவலகம்: கலெக்டர் குஷ்வாஹா திறந்து வைத்தார்
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் புதிய சர்வே அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;
திருப்பத்தூர் மாவட்டம் கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டமாகும். இந்த புதிய மாவட்டத்தில் பல்வேறு புதிய துறை அலுவலகங்கள் தற்போது திறக்கபட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று புதிய சர்வே அலுவலகம் திறப்பு விழா வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
புதிய அலுவலகம் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்