விவசாயியாக மாறிய கலெக்டர் தம்பதி: வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்தல்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தனது மனைவியுடன் வயல்வெளிக்கு சென்று திடீரென நெல் நாற்று நட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்த தடுப்பூசி போடும் முகாமில் நேற்று மட்டும் 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
இதில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அச்சத்தை போக்கவும் மேலும் தடுப்பூசி போடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து தடுப்பூசி போடுவது குறித்து பேசினார். அதனை தொடர்ந்து அச்சமங்கலம் உயர்நிலை பள்ளியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அவர்களின் மனைவி ஷிவாலிகா அவர்கள் தனது இரண்டாவது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொன்டார்.
அதனைத் தொடர்ந்து மூக்கனூர் கிராமத்தில் விவசாய பெண்கள் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திடீரென காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கி சென்று வயல்வெளிகளில் சேற்றில் இறங்கி விவசாய பெண்களுடன் இணைந்து நெல் நாற்று நடவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஷிவாலிகா அவர்களும் நாற்று நடவு செய்தனர். அதனை அங்கிருந்த பெண்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.