மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 லிருந்து 18 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்;
தமிழகம் முழுவதும் 15 லிருந்து 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இன்று முதல் கொரோனா தடுப்பு ஊசி போடுதற்கான முகாமை தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்த நிலையில்.
திருப்பத்தூர் மாவட்டத்திலும் முதல் கட்டமாக மாணவ மாணவிகளின் பெற்றோர் அனுமதி கடிதத்துடன் மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 15 லிருந்து 18 வயதுக்கு உட்பட்ட 452 மாணவிகளுக்கும், ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 241 மாணவர்களுக்கும் மடவாளம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 259 மாணவிகளுக்கும் என மொத்தம் 957 மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முகாமை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்குள் திருப்பத்தூர் தாலுகா பகுதியில் உள்ள சுமார் 6337 மாணவ மாணவிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்,
இந்த முகாமில் திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ் மற்றும் நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் கல்வி அலுவலர், சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.