நடமாடும் கொரானா தடுப்பூசி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர்

திருப்பத்தூரில் நடமாடும் கொரானா தடுப்பூசி வாகனத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Update: 2022-01-03 11:55 GMT

 நடமாடும் கொரானா தடுப்பூசி வாகனத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரானா தொற்றின் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கிவ் இந்தியா திட்டத்தின் வாயிலாக மாவட்ட நிர்வாகமும் ஜீவிகா ஹெல்த்கேர் பவுண்டேஷனும் இணைந்து திருப்பத்தூர், ஆலங்காயம், மாதனூர் ஒன்றியங்களுக்கு செல்ல 3 நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

இந்த மூன்று வாகனங்களிலும் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் இரண்டு உதவியாளர்களை கொண்டு இன்று முதல் தொடர்ந்து பதினொரு மாதங்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாகனத்தின் மூலமாகவே 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனம் துவக்க விழாவில் சுகாதாரத் துறை மாவட்ட இணை இயக்குனர் செந்தில் ஜீவிகா ஹெல்த்கேர் பவுண்டேஷன் நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News