பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா

பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு. 30க்கும் மேற்பட்டோர் காயம்

Update: 2022-01-19 14:20 GMT

இலக்கை நோக்கி அதி வேகமாக ஓடி வரும்  காளை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

இதில் வாணியம்பாடி, திருப்பத்தூர் மிட்டூர், வேலூர், கிருஷ்ணகிரி, மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர்.

வாடிவாசலில் இருந்து காளைகளை அவிழ்த்து விடப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அதி வேகமாக ஓடிய காளையின்  உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக மிட்டூர் சௌந்தர் என்பவர் காளை ரூபாய் 50 ஆயிரத்தை வென்றது.

இரண்டாம் பரிசாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காளை ரூபாய் 45 ஆயிரம் வென்றது,

மூன்றாவது பரிசாக அன்னேரி சூர்யா காளை ரூபாய் 40 ஆயிரத்தை வென்றது.

இதுபோன்று மொத்தம் 25 பரிசுகள் வழங்கப்பட்டது

இதனைக்காண சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து இளைஞர்கள், பொதுமக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி கண்டு ரசித்தனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும்சீறிப்பாய்ந்த காளைகள் மீது கை போட்ட இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News