சிறுநீரக தொற்றால் பாதிப்பு அடைந்த 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை
திருப்பத்தூர் அருகே சிறுவயதில் இருந்து சிறுநீரக தொற்றால் பாதிப்படைந்த 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த சகாயம் நகர் பகுதியைச் சார்ந்த ஆஷா என்பவரின் 5 வயது மகன் ஜனோ பிராங்கிளின் என்பவர் தனது இரண்டரை வயதில் இருந்து சிலம்பம் பயிற்சி எடுத்து வருகிறார்.
ஜனா பிராங்கிளினுக்கு பிறந்த முதலே சிறுநீரகத் தொற்று காரணமாக இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளனர் இவர் தன்னுடைய இரண்டரை வயதில் திருப்பத்தூரில் வீரக்கலை கூடமான பாரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் கல்லூரியில் இணைந்து சிலம்பம் கற்று வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு 12 பானைகள் மீது தொடர்ந்து 20 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை செய்தார். இதனை முதல் தடவையாக சென்னையில் இருந்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் எனும் பெயரில் இயங்கும் தனியார் குழு ஜனோ பிராங்கிளின் திறமையை பதிவு 5 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் தொடர்ந்து 20 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக அளவில் சாதனை படைத்த இருப்பதாக சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் அதே போல் அதனை முறியடிக்கும் வகையில் இரண்டாவதாக ஜனோ பிராங்கிளின் 30 பானைகள் மீது தொடர்ந்து 1 மணி சிலம்பம் மற்றும் மான் கொம்பு, சுற்றி இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்று இரண்டாவதாக தனது உலக சாதனை படைத்தார்.
இந்த நிலையில் இன்று மூன்றாவதாக ஜனோ பிராங்கிளின் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சிலம்பம் சுற்றிக்கொண்டு பின்னோக்கி நடந்தார். மேலும் முப்பது பானைகள் மீது அமர்ந்து யோகாசனம் மற்றும் 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.
இதற்காக ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தனியார் நிறுவனம் இவருடைய சாதனையை பதிவு செய்து ஒவ்வொரு நிகழ்விற்கும் 3 ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
மேலும் இவருடைய ஐந்து வயதில் தனியார் நிறுவனத்தின் மூலம் சாதனையாளர்களை உருவாக்கும் ஐந்து புத்தகத்தில் உலகச் சாதனை படைத்து புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது