கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகள்: பரிசீலிக்க கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை காக்கும் பணியில் ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகளை பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வரவேண்டும்;

Update: 2021-05-17 06:45 GMT

தமிழகத்தில் இந்திய மருத்துவமுறையில் சிகிச்சையளிக்க, கல்வி போதிக்கும் அமைப்பான ஆயுஷ் எனப்படும் அமைப்பில், ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி, இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரிகள் இணைந்து உள்ளன. இக்கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றன. அண்மையில் உதயமான வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து, பிறமாவட்டங்களி்ல் உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு புதியதாக ஒரே ஒரு மருத்துவக்கல்லூரி மட்டும் துவக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியானது, இயற்கை மற்றும் யோகா பயிற்றுவிக்கும் கல்லூரியாகும். இத்தோடு சேர்த்து சுமார் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தமிழகத்தில் அமைந்து உள்ளன.

 தற்போது, நிலவிவரும் உயிர்க்கொல்லி வைரசான. கொரோனாவின் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அதிகமாக பெருகிவருவதை கருத்தில் கொண்டும், தவித்து வரும் ஆங்கிலமருத்துவமனைகளின் நிலையினை கருத்தில் கொண்டும், இந்திய மருத்துவ முறையில் சிகிச்சையளிப்பதையும், ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள ஆயுர்வேத, சித்தா, யுனானி, ஹோமியோபதி, இயற்கை  மற்றும் யோகா மருத்துவக்கல்லூரிகள் அனைத்திலும் கொரோனா நோயாளிகளை கவனிக்கும் மையங்களை உருவாக்குவதன் மூலம்,  புதிதாக சுமார் 15,000 படுக்கைகளை ஒருசில தினங்களிலேயே உருவாக்கிட முடியும்.

ஏற்கனவே இக்கல்லூரிகள் துவங்குவதற்காக, ஒவ்வொரு மருத்துவமுறைக்கும்  சுமார் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை சொந்தமாகவே அமைத்துள்ளன.  ஆங்கில மருத்துவமனைகளில், படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, வெண்டிலேட்டர் பற்றாக் குறை, மருத்துவர்கள், செவலியர்கள் பற்றாக்குறை என பல பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டு, இந்திய மருத்துவ முறையில் சிகிச்சையளிக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மையங்களை பயன்படுத்துவதன் மூலமாக, அந்தந்த மாவட்ட நோயாளிகள் இந்திய மருத்துவ முறையில் சிகிச்சை பெறவாய்ப்பாகவும் இருக்கும். இதன் மூலமாக டாக்டர் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை என்னும் நிலையிருக்காது.

மேலும் நோயாளிகளின் நோய்த்தீவிரத்திற்கேற்ப அந்தந்த மருத்துவ முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளே விருப்பப்படும் பிரிவில் அனுமதிக்கச்செய்யலாம். இதன் மூலம் ஆங்கில மருத்துவமுறையிலான மருத்துவமனைகளில் நெரிசல் குறையும். உயிர்ச்சேதமும் குறையும். மக்கள் பீதி மற்றும் பதட்டத்திலிருந்து விடுபடுவார்கள்.

அரசு இந்திய மருத்துவ முறையில் சிகிச்சையளிக்கும் வகையில் ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகளை பயன்படுத்த முன்வரவேண்டும். இதற்கான திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவேண்டும்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Instanews #tamilnadu #ஆயுஷ்மருத்துவமனைகள் #Coronatreatment #Tiruppathur #AyushHospitals #coronavirus #coronaaffect #corona #CoronaSpread #Corona2ndWave #coronavirusoutbreak #covid-19 #covidvaccine #covid #COVID #Hospitals #request

Tags:    

Similar News