ஜெயக்குமார் கைது: அரசின் நடவடிக்கையை கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டம்
திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் காவல்துறையினர் கள்ள ஓட்டு போட முயன்ற நரேஷ்குமாரை கைது செய்யாமல், பிடித்த கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காரணம் இல்லாமல் ஜெயக்குமார் மீது திமுக அரசு பல்வேறு வழக்குகள் பதிவு செய்து பிணையில்வரமுடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
இதனால் திமுகவின் கைகூலியாக செயல்படும் காவல்துறையையும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை உடனடியாக விடுதலை செய்து கோரியும், திமுக அரசின் அராஜக போக்கை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகம் முன்பு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி.டி.குமார் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.