திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வாணியம்பாடியில் மின் டிரான்ஸ்பார்மர் ஆற்றில் விழுந்ததால் மின் விநியோகம் நிறுத்தம், தரைப்பாலம் மூழ்கியது.;

Update: 2021-11-19 13:07 GMT

ஆம்பூர் அடுத்த உள்ளி வளத்தூர் பகுதியை இணைக்க கூடிய தரைப்பாலம் முற்றிலுமாக மூழ்கியது

திருப்பத்தூர் மாவட்ட முழுவதும் காலை வரை 8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பாலாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆம்பூர் அடுத்த உள்ளி வளத்தூர் பகுதியை இணைக்க கூடிய தரைப்பாலம் முற்றிலுமாக மூழ்கி உள்ளதால் ஆம்பூரில் இருந்த குடியாத்தம் செல்லும் வாகனங்களும் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்கு வரக்கூடிய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழையால் வாணியம்பாடி அருகே வெளிதிமானிக்க பெண்டா மலை பகுதிக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாணியம்பாடியில் இருந்து   வெளிதிமாணிக்க பெண்டா செல்லும் மலை சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வழி போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் ஆந்திரா அரசு கட்டி உள்ள தடுப்பணை நிரம்பி அதிக அளவு தண்ணீர் தமிழக பாலாற்றில் வந்து கொண்டு இருக்கின்றது.

மேலும் வாணியம்பாடி பெரியபேட்டை, சென்னாம் பேட்டை பகுதியில்  பாயும் கல்லாற்றில் மழை நீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக    சென்னாம் பேட்டை பகுதில் ஆற்றில் அருகே இருந்த மின் டிரான்ஸ்பார்மர் ஆற்று நீரில் விழுந்தது. தகவலின் பேரில் மின்சார துறையினர் மின் நிறுத்தம் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


மேலும் மழைநீர் வெள்ளம் நகர் பகுதிகளில் உள்ள காமராஜபுரம், கரீமாபாத், சலாமாபாத, ஆசிரியர் காலனி ஆகிய குடியிருப்பு  பகுதிகளிலும், அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது இருந்தாலும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News