திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்கப்பட்டன.;
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் உள்ள 171 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 1042 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனு பரிசீலனையில் 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 996 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 219 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 204 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 123 மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 292 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 280 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 210 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 201 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 71 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 71 மனுக்களும் ஏற்கப்பட்டது. உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 64 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 64 மனுக்களும் இயக்கப்பட்டது. ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 63 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 62 மனுக்கள் ஏற்கப்பட்டு 1 மனு நிராகரிக்கப்பட்டது.