கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு;
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் மற்றும் போக்குவரத்து துறை அரசு கூடுதல் செயலாளர் ஜவஹர் ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் இருப்பு, மற்றும் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார்
மேலும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்