திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு: பாதுகாப்பு விதிமுறைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு
திருப்பத்துார் மாவட்டத்தில் சந்தைகள், வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.;
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என வணிக நிறுவனங்கள், சந்தைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அமர் குஷ்வாஹா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறையினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்கள் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வந்து செல்கின்றனர்.இது மீண்டும் தொற்று பரவ வழிவகுக்கும் எனவே அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க அரசை வலியுறுத்த வேண்டும். அனைத்து நகராட்சி பகுதிகளில் வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் காவல் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும்,
பேரூராட்சி பகுதிகளில் வருவாய் துறையினர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் காவல்துறையின் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். நகரின் முக்கிய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர்கள் மீது அரசின் வழிகாட்டுதல்கள் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கலெக்டர் உத்தரவிட்டார்.