வாணியம்பாடி அருகே எருது விடும் திருவிழா

Update: 2021-01-21 09:45 GMT

வாணியம்பாடி அருகே திரௌபதி அம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் திருவிழாவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை மற்றும் நிம்மியம்பட்டு பகுதிகளில் திரௌபதி அம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு 66 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவின் போது அரசு விதிமுறைகளை பின்பற்றி இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டு பின்னரே வாடிவாசலில் கொண்டு வந்து அவிழ்த்து விடப்பட்டது.

இதில் குறைந்த நொடிகளில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ. 51 ஆயிரம்,இரண்டாம் பரிசு ரூ. 41 ஆயிரம் ,மூன்றாம் பரிசு ரூ. 31 ஆயிரம் உட்பட 25 க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் முதல் மூன்று பரிசுகள் பெறும் காளைகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் அமைச்சர் நிதியில் இருந்து வழங்கினார். இதில் வாணியம்பாடி ,நிம்மியம்பட்டு ,கொத்தக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ,பெண்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவினை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News