ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கிய ஏலகிரி ஸ்ரீராமகிருஷ்ணா மடம்
ஏலகிரி மலை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் 70 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டது;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரி மலை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சார்பில் அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.
ரூ 56.7 லட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 35 ஆக்ஸிஜன் செறிவூட்டிகருவிகள் மற்றும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு 35 ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள் என மொத்தம் 70 ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவனருள் முன்னிலையில் அதன் நிர்வாகிகள் சுவாமி.பாவரூபானந்தா மற்றும் சுவோ தனியார் நிறுவன நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகியோர் டாக்டர்களிடம் ஒப்படைத்தனர்.