ஏலகிரி குறுங்காடுகளில் விதைகள் தூவும் விழா: தேவராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஏலகிரி மலை குறுங்காடுகளில் விதைகள் தூவும் நிகழ்வை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்;

Update: 2021-06-05 11:44 GMT

ஏலகிரி மலை குறுங்காடுகளில் விதைகள் தூவும் நிகழ்வை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்த காட்சி.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசினர் பழத்தோட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவனருள் ஆகியோர் இணைந்து குறுங்காடுகளில் விதை தூவுதல் முறையில், விதைகளை தூவும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், சங்கர் ஏலகிரிமலை காவல் உதவி ஆய்வாளர் தங்கராஜன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தொழில் அதிபர் ஜெயகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தார்கள்.

Tags:    

Similar News