நாட்றம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி
நாட்றம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.;
நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியான கட்டிட தொழிலாளி கோபி.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கூத்தாண்டகுப்பம் ராஜா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கோபி(33). கட்டிட தொழிலாளியான இவருக்கு மஞ்சுளா என்கின்ற மனைவியும், ஹேமலதா, யுவராஜ் ஆகிய குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கோபி தனது பைக்கில் கிருஷ்ணகிரி&வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மல்லப்பள்ளி கிராமம் கொய்யாகாமேடு முருகன் வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் லாசர் மகன் சுரேந்தர் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.