ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ தேவராஜ்;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை, அத்தனாவூர் பகுதியில் பல வருடங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இதுகுறித்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்
அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறையை போக்க பல வருடங்களாக பயன்படுத்தப்படாமலும், மின்சார வசதி இல்லாமல் இருந்த கிணற்றுக்கு மின்சார கம்பங்கள் அமைத்து மின்சார வசதி ஏற்படுத்தி, மின்மோட்டார் அமைக்கப்பட்டது.
அதனை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, அங்கு பல வருடங்களாக நிலவிய குடிநீர் கட்டுப்பாட்டினை தீர்த்த சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் மிகுந்த நன்றியை தெரிவித்தனர். மேலும் கனியூரான் வட்டம், மேட்டுதனியூர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.