ஜோலார்பேட்டை அருகே முதல் முதலாக எம்.எல்.ஏவை பார்த்த மலை கிராம மக்கள்
ஜோலார்பேட்டை அருகே முதல் முதலாக எம்எல்ஏவை பார்த்த ராயனேரி கடுக்காடு மலை கிராம மக்கள். அடிப்படை வசதிகளை செய்து தருவதாக எம்எல்ஏ உறுதி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மலைகிராமங்கள் உள்ளன இதுவரை எந்த எம் எல் ஏவும் சென்றது கிடையாது. இத்தனைக்கும் கடந்தமுறை அந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவர், அதிமுக அரசு இருந்தபோது 8 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தார். இருப்பினும் குறிப்பிட்ட சில மலைக் கிராமங்களுக்கு சென்றதே கிடையாது என கூறப்படுகிறது
இந்நிலையில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஏலகிரி மலையில் உள்ள சிறிய கிராமத்துக்கு சென்று மலைவாழ் மக்களை நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். பாதை வசதிகள் இல்லாத அந்த கிராமமான ராயனேரி கடுக்காடு வட்டம். அக்கிராமத்தில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்துக்கு 5 கிலோ மீட்டர் வரை காட்டு வழியில் நடந்து செல்ல வேண்டும். இவர்களுக்கு குடிதண்ணீர், சாலை வசதி, மின்சார வசதி, எதுவுமே இல்லாத நிலையில் சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆகியும் அங்கு எந்தவித வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு சென்ற ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜ் அங்கு வசிக்கும் ஒவ்வொரு வீடாக சென்று சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு விரைவில் மின்சாரம் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தார் அதனைக் கேட்ட அக்கிராம மக்கள் எம்எல்ஏவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.