ஏலகிரி மலையில் பாறைகள் இன்னமும் அகற்றப்படாததால் போக்குவரத்து பாதிப்பு

ஏலகிரி மலையில் மழை காலத்தில் சரிந்து விழுந்த பாறைகள் இன்னமும் அகற்றப்படாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-03-28 16:14 GMT

ஏலகிரியில் பாறைகள் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏலகிரி மலையில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பாறை கற்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அவ்வப்போது அகற்றி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர்.  2வது மற்றும் 6வது கொண்டை ஊசி வளைவு சாலைகளில் பெரிய அளவிலான பாறை கற்கள் சரிந்து சாலையில் விழுந்ததால் வாகனங்கள் ஒரு வழி போக்குவரத்து ஆக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அதிகளவில் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலிருந்து கீழே வரும் வாகனங்களும் கீழிருந்து மேலே செல்லும் வாகனங்களும் பாறைகள் விழுந்த பகுதியில் ஒன்று சேர்ந்ததால் வாகனங்கள் இருபுறமும் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாகன ஓட்டிகளே இறங்கி வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி இயக்கி பின்னர் வாகனங்களை மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் இயக்கி சென்றனர்.

மேலும் இங்கு உடைக்கப்பட்ட பாறை முழுவதுமாக அகற்றப்படாமல் உள்ளதால் சாலையில் பாறை கற்கள் மறைப்பதால் பார்வைக்கு குறைவான பகுதியாக இருந்து வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே போக்குவரத்து பாதிப்பும், சாலை விபத்தும் ஏற்படாமல் இருக்க துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாறை கற்களை முழுவதுமாக அகற்றி போக்குவரத்து பாதிப்பை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News