நாட்றம்பள்ளி அருகே பைக்கில் வேகம்: மரத்தில் மோதி இளைஞர் பலி
நாட்றம்பள்ளி அருகே பைக்கில் வேகமாக சென்ற வாலிபர் மரத்தில் மோதி பலியானார்.;
நாட்றம்பள்ளி அருகே பைக்கில் வேகமாக சென்ற வாலிபர் மரத்தில் மோதி பலி போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் ஊராட்சி வெள்ளனூர் அருந்ததி காலனி பகுதியை சேர்ந்தவர் அனுமுத்து மகன் ஆறுமுகம் (வயது 18) இவரது நண்பர்கள் கீர்த்திவாசன் (வயது 21), குமார் வயது 21 ஆகிய 3 பேரும் நாட்றம்பள்ளியில் இருந்து அதிபெரமனூர் வழியாக ஜங்களாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பல்சர் பைக்கில் அதி வேகமாகச் சென்றப்போது ஆறுமுகம் திடீரென நிலைதடுமாறி மரத்தில் மோதியுள்ளார் அப்போது மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவருடன் வந்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கீர்த்திவாசன், குமார் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.