ஏலகிரி மலையில் படகு இல்லம், இயற்கை பூங்காக்களில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு

ஏலகிரி மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா பகுதிகளில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2021-08-28 17:19 GMT

ஏலகிரி மலையில் உள்ள படகு இல்லத்தை பார்வையிடும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைத்தொடர் ஏலகிரி மலை ஆகும். இந்த ஏலகிரி மலையில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக படகு இல்லம் மற்றும் இயற்கை பூங்கா போன்ற பகுதிகளில்  இன்று  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது படகு இல்லத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, இயற்கை பூங்கா பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மலர்கள், சிறுவர் பூங்கா, விளையாட்டு திடல் போன்றவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News