பரோலில் வந்த பேரறிவாளனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மாதத்தில் முதல் வாரம் கையெழுத்திட நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் ஜாமீன்அளித்தது;
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அவருடைய தாயார் அற்புதம்மாள் புழல் சிறையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாலும் தன் மகன் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று உள்ளது எனக்கூறி தனது மகனுக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மே மாதம் முதலில் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அவரது பரோல் மேலும் நீட்டிக்கப்பட்டது.
பேரறிவாளன் வயிறு சம்பந்தமான பிரச்சனையின் காரணமாக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் 28-முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 8 மாத காலமாக வீட்டிலேயே இருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் பல்வேறு உடல் ரீதியான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்ததார்
இந்த நிலையில் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசு மேலும் ஒரு மாத காலம் உடல்நிலை சரி இல்லை என்ற காரணத்தை காட்டி பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது வரை சுமார் 9 மாத காலமாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதத்தின் முதல் வாரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.