நாட்றம்பள்ளி அருகே அக்கா- தம்பி அடுத்தடுத்து உயிரிழப்பு
நாட்றம்பள்ளி அருகே அக்கா தம்பி அடுத்தடுத்து உ யிரிழந்த சம்பவம் கிராம மககளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது;
பன்னீர் செல்வம்
கிருஷ்ணவேணி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பைரப்பள்ளி தெக்குப்பட்டு பகுதியை பெரியசாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 75) இவர்களுக்கு நான்கு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உண்டு.
கிருஷ்ணவேணியின் மகள்களில் ஒருவரான பானுமதியை கிருஷ்ணவேணியின் தம்பி பன்னீர்செல்வம் (வயது 58) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர்.இவர்கள் கிருஷ்ணவேணி வீட்டிலேயே வசித்தனர்..இவர்களுக்கு சாரதி என்ற மகன் உள்ளார்.
பன்னீர்செல்வம் அக்கா மீது அதிகளவில் பாசத்தை வைத்து இருந்தார். இதனால் எந்த நேரத்திலும் அக்காவைப் பிரிய மனமில்லாமல் வாழ்ந்து வந்துள்ளார் இந்த நிலையில் பன்னீர்செல்வம் உடல் நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் தெரிய வர பன்னீர்செல்வத்தின் அக்காள் கிருஷ்ணவேணியும் தம்பி இறந்த துக்கம் தாளாமல் உயிரிழந்துள்ளார்.
அக்காள் தம்பி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..