ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனையில் மேற்கூரை பழுதடைந்துள்ளது
ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனையில் மேற்கூரை பழுதானதால் கனமழை காரணமாக சுமார் 50 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாக வாய்ப்புள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வேகம் பணிமனை உள்ளது, இந்த பணிமனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பணிமனையில் பழுதடைந்து இருக்கக்கூடிய சரக்கு ரயில் சக்கரங்கள் மற்றும் பெட்டிகளை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள். அதற்காக சுமார் 50 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் அந்த பணிமனையில் உள்ளது. ஆனால் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை முற்றிலும் பழுதாகி உள்ளது.
தற்போது ஒரு வார காலமாக மாலை நேரங்களில் கனமழை பெய்வதால், மழைநீர் மேற்கூரை வழியாக வழிந்து பணிமனை இயந்திரங்கள் பழுதாகும் வாய்ப்புள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
உடனடியாக தென்னக ரயில்வே உயரதிகாரிகள் இதன் மீது கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பணிமனையில் பணிபுரியும் ஊழியர்களின் மனக்குமுறல் ஆக உள்ளது