நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடுகள் மீட்பு
நாட்றம்பள்ளி அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு பசுமாடுகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.;
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடுகளை மீட்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட்ட பெரிய மோட்டூர் ஊராட்சி சின்ன கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ். இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் மேய்ச்சலுக்காக அந்த பகுதியில் விட்டிருந்தார்.
அப்போது அருகிலுள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பசு மாடுகள் சத்தம் போடவே ஓடிவந்து பார்த்தபோது கிணற்றில் இரண்டு பசுமாடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கனகராஜ் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத் துறையினர் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 2 பசுமாட்டை கயிறுகளை கட்டி தீயணைப்பு துறை வீரர்கள் சாதுரியமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.