வீட்டு மனைகளை முறையாக அளவீடுகள் செய்து தர எம்எல்ஏ விடம் கோரிக்கை

புத்தகரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டு மனைகளை முறையாக அளவீடுகள் செய்து தர ஜோலார்பேட்டை எம்எல்ஏவிடம் கோரிக்கை;

Update: 2021-12-02 15:45 GMT

வீட்டுமனையை முறையாக அளவீடு செய்ய எம்எல்ஏ தேவராஜிடம் கோரிக்கை அளித்த பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புத்தகரம் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியிலுள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை வழங்கபட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டு மனைகளை முறையாக அளவீடுகள் செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இதுவரை வழங்காமல் நாட்றம்பள்ளி வருவாய்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் தங்களை அலைக்கழித்து வருவதாக கூறி ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் இடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரியவர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..

Tags:    

Similar News