ஜோலார்பேட்டை அருகே செம்மரம் கடத்தல்: ஒருவர் கைது
ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தப்பட்ட செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவலர்கள் சக்கரவர்த்தி ஜெயப்பிரகாஷ் சதாசிவம் ஆகியோர் கொண்ட குழு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி அதிவேகமாக கார் ஒன்று வருவதை அறிந்த காவலர்கள், காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 6 செம்மரக்கட்டைகள் காரில் கடத்தப்பட்டது சோதனையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அந்த காரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவிற்கு உட்பட்ட பெரியதள்ளபாடி பகுதியைச் சேர்ந்த முகமது கெளப் (வயது 30) என்பவரை கைது செய்தனர்
ஜோலார்பேட்டை போலீசார் செம்மரக்கட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.