ஜோலார்பேட்டையில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
ரயிலில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் ஜோலார்பேட்டையில் கைது. 12 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் 5வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், சென்னை புதுப்பேட்டை சேர்ந்த சலீம் ராஜா என்பது தெரியவந்தது.
இவர் மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெளிமாநில மதுவை கடத்தி வந்தது தெரிந்தது. பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம் ராஜாவை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்து பல அளவு கொண்ட 12 லிட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.