நாட்றம்பள்ளி சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு பெண் படுகாயம்

நாட்றம்பள்ளி அருகே  பைக் மீது மினி லாரி மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு. பெண் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

Update: 2021-07-16 16:47 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சு.பள்ளிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜி மகன் சந்தோஷ்குமார்( வயது 31) கூலிதொழிலாளி.  இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் நாட்றம்பள்ளி அடுத்த முத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவருக்கும்  திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் புதுமாப்பிள்ளை தனது மனைவியுடன்  தனது மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது புதுப்பேட்டை அடுத்த பணியாண்டப்பள்ளி அருகே சென்ற போது எதிரில் வந்த மினி லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி விசப்பட்ட புதுமண தம்பதிகள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதைகண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து  இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

ஆனால் புதுமாப்பிள்ளை சந்தோஷ்குமார் போகும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.  அவரது மனைவி ஜோதிலட்சுமி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

விபத்து குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி  போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினி லாரி மற்றும் டிரைவரை தேடிவருகின்றனர். திருமண ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News