நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா

நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டையை எம்எல்ஏ தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்கள்;

Update: 2021-08-06 14:22 GMT
நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா

 புதிய மின்னணு குடும்ப அட்டையை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார் 

  • whatsapp icon

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில்  தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு 640 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ சூரியகுமார், நாட்றம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி, மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதேபோல் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு 34 திருநங்கைகள்  உட்பட  1495 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

இதில் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News