ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: பவுன்சர்களுடன் வந்தார், வென்றார், சென்றார்

நாட்றம்பள்ளியில் ஒன்றியக் குழு திமுக உறுப்பினர் பவுன்சர்களுடன் கெத்தாக வந்து இறங்கி ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றினார்

Update: 2021-10-22 17:15 GMT

நாட்றம்பள்ளி ஒன்றிய தலைவர் வெண்மதி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மொத்தமுள்ள 15 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 7 இடங்களில் திமுகவும் 5 இடங்களில் அதிமுகவும் 1 இடத்தில் தேமுதிகவும் 2 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்

இந்த நிலையில் நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது. திமுக, இரு கோஷ்டிகளாக பிரிந்து போட்டியிட்டனர் இரு தரப்பினருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இதனால் ஒன்றியக் குழுத் உறுப்பினர்கள் பலத்த பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அழைத்து வரப்பட்டனர்.

திமுக வேட்பாளர் வெண்மதி ஆதரவு கவுன்சிலர்கள் அனைவரும் தனி பாதுகாப்பு கொண்டு பெண் வேட்பாளர்கள் ஒரே மாதிரியான புடவை  அணிந்து பவுன்சர்கள் 70 பேர் படைசூழ பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வந்தடைந்தனர்.

பின்னர் நடைபெற்ற தேர்தலில்  திமுக வேட்பாளராக போட்டியிட்ட வெண்மதி 9 வாக்குகளைப் பெற்று ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முரளி 6 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்

தேர்தல் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார் இதனை தொடர்ந்து வெண்மதி மீண்டும் பவுன்சர்கள் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வெற்றி ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.

ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெண்மதி பந்தாரப்பள்ளி பகுதியில் போட்டியிட்டு 15 வார்டு ஒன்றிய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News