முன்றாவது நாளாக தொடரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம்
கரும்பு அளவை காரணம் காட்டி இந்த வருடமும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க சர்க்கரைத் துறை ஆணையகம் தயக்கம்
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர், மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2019 -2020ஆம் ஆண்டிற்கான அரவை நிறுத்தம் செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து 2020 -2021 ஆம் ஆண்டிற்கான அரவையையும் நிறுத்தம் செய்து சர்க்கரைத் துறை ஆணையர் முடிவெடுக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் கடந்த ஆண்டு தொடர்ந்து 12 நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறப்பட்டது. தற்போது கரும்பு அளவை குறைவாக காட்டி கரும்பு அபிவிருத்தி அலுவலர் ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
எனவே, கரும்பு அளவை காரணம் காட்டி இந்த வருடமும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க சர்க்கரைத் துறை ஆணையகம் அனுமதி வழங்க தயக்கம் காட்டி வருவதாகவும், சென்ற வருடம் போராட்டம் நடத்தி ஆலையை இயக்க நேரிட்டது போல, இந்த வருடமும் ஆறு மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை போன்ற கோரிக்கைகளை தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.