நாட்றம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி
நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரிடேம் பகுதியில் குட்டையில் குளித்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி. போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரிடேம் பகுதியில் பார்த்திபன் (35) என்பவர் சட்டவிரோதமாக செயற்கை மணல் தயாரித்து வந்துள்ளார். செயற்கை மணல் தயாரிக்க சுமார் 10 அடி ஆழம் குளத்தை தோண்டி அதில் தண்ணீரை சேமித்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆடு மேய்க்க சென்ற சொத்தமலை பகுதியை சேர்ந்த சென்னையன் மகன் ஹரி (14), கனகன் மகன் தனுஸ்ராஜ் (13) மேலும் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் குளத்தில் குளித்து உள்ளனர். அதில் நீச்சல் தெரியாமல் இருவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
குட்டையில் மின்சார வயர் உள்ளதால் மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சட்டவிரோதமாக செயற்கை மணல் தயாரித்த கும்பலை நாட்றம்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.
2 பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.