அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ தேவராஜ்
புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ தேவராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மருத்துவமனைக்கு தேவையான குடிநீர் சீராக வருகின்றதா கழிப்பறை சுத்தமாக செய்யப்படுகின்றன அதேபோன்று மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் என்னென்ன குறித்தும் மேலும் கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுகின்றன என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் மற்றும் மருத்துவகள், செவிலியர்கள் என பலர் உடனிருந்தார்கள்.