ஜோலார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

ஜோலார்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் திமிக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

Update: 2021-09-27 17:25 GMT

திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு,எம் ஆர் கே பன்னீர்செல்வம்,  சக்கரபாணி ஆகியோர் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் வெற்றி பெற்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வெற்றி பெற்றதற்கு சமம் என கூறினார்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் ஊரக உள்ளாட்சி தேர்தல்  முடிந்த மூன்று நாட்களில் அந்த தலைவர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதியதாக சங்கத் தேர்தல் நடைபெற்று, அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் சீட் கிடைக்காத அனைவருக்கும் வாய்ப்பளித்து தரப்படும் என துரைமுருகன் உறுதி அளித்தார்

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ்,  திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News