புத்துக்கோயிலில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நாட்றம்பள்ளி அருகே புத்துக்கோயிலில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை ஒன்றிய தலைவர் சத்தியா சதீஷ் பார்வையிட்டார்

Update: 2021-12-04 09:41 GMT

தடுப்பூசி முகாமை பார்வையிடும் ஜோலார்பேட்டை ஒன்றிய தலைவர் சத்யா சதிஷ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்தில் 84% கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், அதேபோன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி  அதிக அளவில் போட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு அந்தந்த ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய கவுன்சிலர்கள் இதனை முன்னெடுத்து மக்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம் குறித்து எடுத்துரைத்து கொரோனா தடுப்பூசி அதிகளவில் போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் நாட்றம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியில்  13-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை பெற்றது. இதில் ஜோலார்பேட்டை ஒன்றிய தலைவர் சத்யா சதிஷ் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பொது மக்களிடம் எடுத்துரைத்தார்.  இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் ஜனனி மோகன்ராஜ், பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மங்கம்மாள் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News