சுடுகாடு இடத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுடுகாடு இடத்தை மீட்டுத்தரக் கோரி கொத்தூர் ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட தமிழக ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ளது கொத்தூர் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் குண்டுகொல்லை பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர்.
சுடுகாடு இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகவும். மேலும் இப்பகுதியில் இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய விடுவதில்லை என கூறி நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது...