முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஜோலார்பேட்டையில் வாக்களித்தார்
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில்ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு செய்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக இன்று திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதற்காக காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறன திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்ததால் வாக்குப்பதிவு சிறிது மந்தமாகவே காணப்பட்டன 11 மணி நிலவரப்படி 13 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட புள்ளானேரி ஊராட்சி புதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனது வாக்கை பதிவு செய்தார்.