நாட்றம்பள்ளி அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
நாட்றம்பள்ளி அருகே குடிநீர் சரிவர வழங்கவில்லை என காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை ரோடு, காந்தி நகர் 4 வது தெரு சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இப்பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக சரிவர குடிநீர் கிடைக்கவில்லை என பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்து உள்ளதாக கூறப்படுகின்றன. அதன் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திடீரென காலிக்குடங்களுடன் மனுக்களை கையில் வைத்துக்கொண்டு போராட்டம் செய்தனர்
அதன் பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்