கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி

கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த நகைகள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு

Update: 2022-03-24 15:43 GMT

கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் தங்க நகைகளை மாவட்ட அறங்காவலர் குழு வழங்கியபோது

தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 5 பவுன் (40 கிராம்) வரையிலான தங்க நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்தது.

அதன்படி கந்திலி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 325 பேர், 5 பவுன் தங்க நகைகளை வைத்து ரூ.1 கோடியே 47 லட்சம் கடன் பெற்றிருந்தார்கள் அவர்களுக்கு தங்கநகைகள் திருப்பி வழங்கப்படும் நிகழ்ச்சி கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சார் பதிவாளர் தர்மேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் கு.அன்பழகன் முன்னிலை வகித்தார், பொதுமக்களுக்கு தங்க நகைகளை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.எஸ்.அன்பழகன் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் ப. பிரபு, ஒன்றியக்குழு தலைவர் நீலாம்மாள் அசோக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் உஸ்மான், சங்க இயக்குனர், உறுப்பினர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மேற்பார்வையாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News