செட்டியப்பனூர் ஊராட்சியில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகள்

செட்டியப்பனூர் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2021-09-05 14:00 GMT

மலைபோல் குவிந்திருக்கும் குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக தற்போது ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சியாக மாற்றப்பட்டது. 

ஜோலார்பேட்டை ஊராட்சி பிரிக்கப்பட்டதன் பின்னர், தற்பொழுது ஊராட்சி செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகள் மற்றும் அனைத்து பணிகளும் சரிவர செயல்படாமல் உள்ளது. செட்டியப்பனூர் ஊராட்சிகளில் அங்கே அங்கே குப்பைகள் கடந்த பல மாதங்களாக தேங்கி உள்ளது. இதனால் ஊராட்சி பகுதிகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் மிகுந்த தொல்லையை சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட இருந்தபொழுது இருந்த வசதிகள், தற்பொழுது ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட மாற்றப்பட்டபின் கிடைக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையோடு கூறி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News