தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த மான்
நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு.;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுண்ணாம்புகுட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனைக்கண்ட நாய்கள் அந்த மானை துரத்தி உள்ளது. அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து திருப்பத்தூர் வனத்துறையினர் மானை மீட்டு அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.