ஜோலார்பேட்டை யில் உள்ள ஏரி குளங்களை ஆழப்படுத்த திட்ட அறிக்கையினை தயார் செய்ய உத்தரவு.
ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள ஏரி குளங்களை ஆழப்படுத்திட திட்ட அறிக்கையினை தயார் செய்து அனுப்பிட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் மங்கம்மாள் குளம் அருகாமையில் உள்ள தனியார் நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றிட வேண்டுமென நிலத்தின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இடத்தினை நேரடியாக பார்வையிட்டு ஆயவு செய்தார்
மங்கம்மா குளத்தினை தாண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும்படியாக சிறிய கல்வெட்டு தரைப்பாலம் அமைத்து தண்ணீர் செல்ல வழியினை ஏற்படுத்த வேண்டும், அப்போது தண்ணீர் நிலத்தில் நிற்காது, எனவே இப்பணியினை ஒரு வாரத்திற்குள் முடிக்கவும் நகராட்சி ஆணையாளருக்கு மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார்
இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை நகராட்சி குடியானகுப்பம் ஏரி கணபதி குட்டையினை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஏரியின் பரப்பளவு மற்றும் நிலப்பகுதியினை கேட்டறிந்தார். ஏரியினை சீரமைக்க ஏரி வரத்து கால்வாய்கள் அளவீடு செய்து ஏற்படுத்திடவும், ஏரியின் கரைகளை ஏற்படுத்திடவும் ஏரியை 2 அடி ஆழத்திற்கு ஆழப்படுத்திடவும் ஏரியினை முழுமையாக அளவீடு செய்திடவும் திட்ட அறிக்கையினை தயார் செய்ய உத்தரவிட்டார்.
நகராட்சி ஓட்டியுள்ள இதுபோன்ற ஏரிகளை சீரமைத்து நகரப்பகுதிகளில் நிலத்திட நீரை அதிகரிக்க, நகராட்சி எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லை ஓரங்களில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி சீரமைக்க புதிய திட்ட அறிக்கையினை தயார் செய்து வழங்கிடவும் கேட்டுக்கொண்டார்.
இந்த திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றிட தேவையான நடவடிக்கை உடனடியாக செய்ய வேண்டுமென நகராட்சி ஆணையாளரிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
இந்த ஆய்வின்போது ஆணையாளர் ராமஜெயம், நகராட்சி பொறியாளர் தனபாக்கியம், மேற்பார்வையாளர்
கார்த்திகேயன், துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்