நாட்றம்பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு

நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-09-14 12:31 GMT

நாட்றம்பள்ளி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 நடைபெற்றுவரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ, தேர்தல் நடத்தும் அலுவலர் தினகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News