புதுக்கோட்டை ஊராட்சியில் நெடுஞ்சாலை பணிகள்: கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெறும் எஸ்டிவி சாலை பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21-ன் கீழ் ரூ.77.06 இலட்சம் மதிப்பீட்டில் சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி (எஸ்டிவி) சாலை, ஜலகாம்பாறை முதல் பால்னாங்குப்பம் வழியாக பெரியவெங்காயபள்ளி வரை நடைபெற்று வருகிறது.
இச்சாலை பணியானது கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. சாலைப்பணியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் இப்பணி தரமாகவும் உறுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இப்பணி வரும் அக்டோபர் மாதம் 2021 இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுககு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி பொறியாளர் சேகர், அவிஜித் ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிட் தளபொறியாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.