ஏலகிரிமலையில் ஏடிஎம் மையத்தில் தகராறு: சப்இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 5 பேர் கைது

ஏலகிரி மலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சப் இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-08-02 16:13 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஏலகிரி மலை மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுகனேஷ் (42),தனியார் கிரானைட் குவாரி மேனேஜராக பணியாற்றி வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் இரவு புங்கனுார் கிராமத்தில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது நீண்ட நேரமாகியும் அவர் ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே வராததால், அங்கு பணம் எடுக்க காத்திருந்த சுற்றுலா பணிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் சுகனேஷை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுகனேஷ் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த  சுகனேஷ் ஆதரவாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு சுகனேஷனை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.

அதன்பேரில் ஏலகிரி மலை  போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த்(29), வெங்கடேஸ்வரன்(31),  பிரசாந்த்(28), சக்தி அமர்நாத்(28), தேவேந்திரன் மகன் பிரசாந்த்(28). ஆகிய 5 நபர்களை  ஜோலார்பேட்டை போலிசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரசாந்த்தின் தந்தை ரவிக்குமார் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்

ஏலகிரி மலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் பொழுது ஏற்பட்ட தகராறில் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News