அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையவழி சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை இடையம்பட்டி அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் இணையவழி சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது;
ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், சைபர் குற்றங்கள், ஆன்லைன் விளையாட்டுகள், அதனால் ஏற்படும் உயிர்சேதம் மற்றும் பண இழப்பு மற்றும் அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்